பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60

கனவை நனவாக்கல்

கனவோ நினைவோ என்று ஐயுறுதல்

கனிச்சுவையன்ன கவி (காசிகண் 100-59)

கனிந்து பழத்த பழம்

கனியாத கல்நெஞ்சம் (குமர 541)

கனியினும் இனியமென் மழலைக் குழவி (காசிகண் 43-15)

கனிவு இல்லாத கல்நேர்நெஞ்சக் கசடன்

கஷ்ட நஷ்டங்களை அனுபவித்தல்; பொருட்படுத்தாதிருத்தல்

கஷ்ட நிஷ்டூரங்களைச் சகித்துக் கொள்ளல்

காக்கறை மூக்கறை - அசடன்

காக்கன் போக்கனாய்த் திரிதல் - சோம்பேறியாய்த் திரிதல்

காக்கனும் போக்கனும் (-அயலும் வழிப் போக்கனும்) கொண்டுபோதல்

காக்கான் போக்கான் - ஊர்பேர் தெரியாதவன்

காச்சுப் பூச்சென்று கத்துதல்

காச்சுமூச்சென்று கத்துதல்

காசு பணத்தை எதிர்பாராது காரியம் செய்தல்

காட்டிலும் மேட்டிலும் கால்வலிக்கத் திரிதல்

காடு கரம்பு

காடு கரைகள் ; காடு கழனிகள் ; காடு தோட்டம்

காடு கெடுத்து நாடாக்கல்

காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கல் (பட்டினப் 283)

காடுங் கரம்புமாயிருத்தல்

காடுஞ் செடியுமாய்க் கிடக்கும் நிலம்

காடுமலைகளை எல்லாம் கடந்து சென்று