பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
63

கிட்ட முட்ட வரவிடாதே

கிட்டாதாயின் வெட்டென மற (கொன்றை 16)

கிட்டாப் பொருளுக்குக் கொட்டாவி விடல்

கிட்டிமுட்டி வரும்போது - காரியம் கைகூடி வரும் போது) இப்படிச் சொல்லாதே (கல்கி)

கிடுகிடாய்த்தல் - நடு நடுங்குதல்

கிடுகிடு என்று நடுங்குதல்

கிடைத்ததைச் சுருட்டும் கீழ்மைக்குணம் படைத்தவர்

கிண்டலாகவும் குத்தலாகவும் பேசுதல்

கிண்டிக் கிளறிப் பார்த்தல்; வெளிக் கொணரல்

கிண்டிக் கிளைத்துப் பார்த்தல்

கிரமமாயும் ஒழுங்காயும் செய்தல்

கிருமிகீடங்களிலும் கீழ்ப்பட்ட அசேதனன் (மனுமுறை)

கிழங்கட்டைகளுக்கும் சோறு போடுக

கிள்ளி நிமிண்டுதல்

கிள்ளுங் கிளியுமாய்க் கிடத்தல்

கிளறிக் கிண்டிப் பார்த்தல்

கிளைத்துத் தழைத்து வளர்தல்

கிறுகிறுத்தல் - மயக்கமாதல், தடுமாறுதல்

கீழும் மேலும் பார்த்தல்

கீறிக் கிறுக்கி எழுதுதல்

கீறிப் பிளந்து கிழித்தல்

குஞ்சு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போதல்

குஞ்சும் குழுவானுமாயிருக்கும் குடும்பம்

குட்டிச் சுவரில் முட்டிக்கொள்ளல்

குட்டையிலே ஊறிய மட்டை

குடங்கைக்கு அடங்கா நெடுங்கண் (குமர. 391)

குடித்தனம் செய்யாமல் தடித்தனமாய்த் திரிதல்

குடித்துக் களித்துக் கூத்தடித்தல், கூத்தாடுதல்