பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

கூத்தடித்துக் கும்மாளம் போடுதல்

கூத்தும் கும்மாளமும் போடுதல்

கூம்பிச் சாம்பிக் குவிந்த பூ

கூரிய அறிவும் சீரிய ஒழுக்கமும் வாய்ந்தவர்

கூற்றங்கடிந்து சீற்றங் கொள்கின்ற கூற்றன் (அ.

கந்தகோட்)

கூற்றம் தனக்கும் கூற்று அன்னான் (வில்லி 32-31)

கூற்றினுங் கொடிய வெய்யோன் (தேவாங்க 20-36)

கூன் குருடு செவிடு கிழடுகள்

கூன் குருடு செவிடு மொண்டி முடங்களுக்கு உதவுக

கூனிக் குறுகிக்கொண்டு உட்கார்ந்திருத்தல்

கூனிக் குறுகிக் கிடத்தல்; போதல்

கூனிக்குன்றி உருச்சிதைதல் (அப்பாத்)

கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொள்ளல்

கெஞ்சிக் கதறிக் கேட்டல்

கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுதல்

கெஞ்சியும் கொஞ்சியும் கேட்டல்

கெஞ்சினால் மிஞ்சுவார், மிஞ்சினால் கெஞ்சுவார்

கெட்டி மேளம் கொட்டி முழக்கல்

கெட்டுக் குட்டிச் சுவராகிவிடல்

கேட்டை மூட்டை செவ்வாய்க் கிழமை எல்லாம் ஒன்

றாய்ச் சேர்ந்திருத்தல்

கேட்பார் பேச்சைக் கேட்டுக் கெட்டுப்போதல்

கேட்பாரற்றுக் கவனிப்பாரற்றுக் கிடத்தல்

கேட்பாரும் மேய்ப்பாருமின்றித் திரிதல்

கேடும் பெருக்கமும் இல்லல்ல (குறள் 115)

கேலியும் கிண்டலும் செய்தல்

கேள்வி கேட்பாடு இல்லாத ஊர்

கேள்வி முறை இல்லாமல்