பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

சண்டை சச்சரவு இன்றிச் சமாதானமாய் வாழ்தல்

சண்டை சல்லியத்திற்குப் போகாதவன்

சண்டை சாடிக்குப் போகாதவன்

சண்டையில்லாது சமாதானத்தோடு வாழ்தல்

சண்டையும் சச்சரவுமாக இருந்தது

சத்திய நித்திய தத்துவன் - கடவுள்

சத்திரம் சாவடிகள் கட்டுதல்

சத்து சித்து ஆனந்தமயமான கடவுள்

சத்தோ சாரமோ இல்லாத

சதா சர்வகாலமும் - எப்பொழுதும்

சதா சர்வதா - எபபொழுதும்

சந்தடி சாக்கில் தப்பி ஓடிவிடல்

சந்தடியும் சன நடமாட்டமும் உள்ள தெரு

சந்தர்ப்பம் சமயம் அறியாமல் பேசுதல்

சந்தர்ப்பமும் சூழ் நிலையும் சரியில்லை

சந்தி சதுக்கங்கள்

சந்து பொந்துகளில் எல்லாம் அலைந்து திரிதல்

சப்புச் சவுக்கென்று வாழ்க்கை கழிந்துவிடுதல் (கல்கி)

சப்புச் சவுக்கென்றிருக்கும் வழுதுணங்காய் (கல்கி)

சப்புஞ்சவறும் வாங்கி வருதல் - கழிபட்ட பொருள்களை வாங்கி வரல்

சமய சந்தர்ப்ப சூழ்நிலைகளால்

சமய சாதி வேறுபாடுகளைப் பாராது

சமயம் சந்தர்ப்பம் அறியாமல் பேசுதல் ; செய்தல்

சமயமும் சந்தர்ப்பமும் வாய்த்தல்

சரச சல்லாப உல்லாசம்

சரி சமானமானவர்

சரி நிகர் சமானமாய் வாழ்தல் (பாரதியார்)

சரியை கிரியை யோகம் ஞானம் (சைவசித்தாந்த நெறி)