பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

சரியொப்பு இல்லாதவன்

சல்லடை போட்டுச் சலித்தல்

சலிப்பும் களைப்பும்

சலிப்பும் சங்கடமும் இல்லாமல் செய்தல்

சலிப்பும் வெறுப்பும் கொள்ளுதல்

சலிப்போ சங்கடமோ இல்லாமல்

சலிப்போ சஞ்சலமோ இல்லாத

சலிப்போ சோர்வோ இல்லாமல்

சவண்டு துவண்டு போன தோல்

சளித்துப் புளித்துப் போன மாவு

சளைத்துக் களைத்துப் போதல்

சழிவு நெளிவு - கோணல், மாணல்

சன்ன பின்னமாய் வெட்டுதல்

சன்னபின்னல் - சிக்கல்; நெருங்கிய பின்னல்

சன்னை சயிக்கினை - சன்னை சாடை; சாடை மாடை

சாக்குப் போக்குச் சொல்லுதல்

சாக்கி பாக்கி இல்லாமல் கடன் தீர்த்தல்

சாகப் பிழைக்கக் கிடத்தல்

சாங்கோபாங்கமாக யோசனை செய்தல் (கல்கி)

சாங்கோபாங்கமாகவும் ரசமாகவும் எழுதுதல் (கல்கி)

சாங்கோபாங்கமாய்ச் சொல்லுதல் - முழுமையாக விரித் துச் சொல்லல்

சாடை மாடையாய்ப் பேசுதல்

சாதக பாதகங்களை ஆராய்தல் - நன்மை தீமைகளை ஆராய்தல்

சா திகுலஞ் சமயமெனுஞ் சுழிப்பட்டுத் தடுமாறல்

சா திகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறல் (திருவா)

சாதி சமயச் சழக்குகளில் உழலா தவர்