பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

செருக்கும் மிடுக்கும் செறிந்த

செருமேம்பட்ட செயிர்தீர் அண்ணல் (பரிபா 1-27)

செல்லங் கொடுத்துச் சீரழியச் செய்தல்

செல்லும் சொல்வல்லான் (கம்ப 2-4-135)

செல்வச் சீரும் சிறப்பும் செறிந்த நாடு

செல்வச் செருக்கில் செம்மாந்திருக்கும்; இருப்பவர்

செல்வத்தில் பிறந்து செழிப்பில் வளர்ந்தவள்

செல்வத்திற் சிறந்த சீமான்கள்

செல்வத்துட் செல்வஞ் செவிச் செல்வம் (குறள் 411)

செல்வம் ஓங்கி வளஞ்செழிக்கும் திருநாடு

செல்வம் கொழிக்கும் திருநாடு

செல்வமும் கல்வியும் செறிந்த செல்வர்

செல்வமும் கல்வியும் சேர்ந்த சிறப்பினோர்

செல்வமும் சிறப்பும் மிக்கவர்

செல்வமும் சீரும் உடைய

செல்வமும் சுகமும்

செல்வமும் செல்வாக்கும் உள்ளவர் ; உடையவர் ,

பெற்றவர் ; படைத்தவர்

செல்வமும் செழிப்பும் மிக்க சீமான்

செல்வமும் புகழும் சேர்த்தல்

செல்வமும் மதிப்பும் சேர்ந்த பெருமையர்

செல்வாக்கும் புகழும் படைத்தவர்

செவ்வியதும் ஒவ்வியதுமான பொருள்

செவ்வையாகச் செப்பம் செய்தல்

செழித்து ஓங்கி இருத்தல் ; வளர்தல்

செழித்துக் கொழிக்கும் செல்வம் ; பயிர்

செழுஞ்சுவையில்லாப் புன்சொல் (வில்லி 1-5)

செற்றமும் சினமும் உற்ற மனத்தவர்