பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

ததும்பித் துளும்பி வழிதல்

தந்திரத்தாலும் மந்திரத்தாலும் பிணிக்க (வசப்படுத்த)

முடியாத

தப்பட்டையடித்துத் தண்டோராப் போடுதல்

தப்பிப் பிழைத்தோடிப் போதல்

தப்பித்தவறி வந்துவிடல்

தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிவிடல்

தப்புத் தண்டா பண்ணாதவர்

தப்புத் தவறுமாக (தப்புந் தாறுமாக)ப் பேசுதல் -

எழுதுதல்

தப்புந்திப்பும் தாறுமாறு மாய்ச் செய்தல் (பழ)

தமிழ் நாடு செய்த தவப்பயனால் தோன்றியவர்

தமுக்கடித்துத் தண்டோராப் போடு

தயக்கமும் கூச்சமும் இன்றிப் பேசுதல்

தயக்கமாகவும் கூச்சமாகவும் இருத்தல் (கல்கி)

தயங்கித் தட்டுத் தடுமாறி (கல்கி)

தயங்கித் தடுமாறிக் கூசுதல்

தயங்கித் திகைக்கும்

தயவு தாட்சண்ணியம் இன்றி; பார்க்காமல்

தயை தாட்சண்ணியம் இல்லாமல்

தரமும் தகுதியும் அறிதல் (க. நா. சு.)

தரமும் திறமும் அற்றவர்கள்

தருக்கிக் களிக்கும் செருக்கினர்

தருமநெறி தவறாத தலைவன் (மனுமுறை)

தருமம் தானம் தவஞ் செய்வார்

தலைகவிழ்ந்து தடுமாறல் (இரட்ச 21-278)

தலைகெட்ட நூலது போல் தட்டழிந்து கெட்டது (இரா

மப். அம்)

தலை தாழ்த்தித் தாழ்ந்து இறைஞ்சுதல்