பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ ணி ய று ப து

95

 சயத்துறை அறனும் அஃதே

என்றிவை சமையச் சொன்னான்.

(இராமா: அங்கதன் 8)

பொறுமையைக் குறித்து இராமன் இவ்வாறு கூறியிருக்கிறான். அரிய பல குணநலன்கள் இப்பெரியவனிடம் உரிமையுடன் பெருகியிருந்துள்ளன.

புண்ணியம் பொலிந்து வர வாழ்ந்து வருபவரே யாண்டும் கண்ணியம் அடைந்து வருகின்றார், வாழ்வுக்குத் தருமமே அணி என்றது இருமை இன்பங்களையும் அதனால் பெறுதல் கருதி.

ஆழ்ந்து ஆராயும் ஆலோசனை தேர்ந்த முடிவால் சிறந்து திகழ்கிறது. சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் எனத் தேவர் குறித்துள்ளதும் இங்கே கூர்ந்து சிந்திக்க வுரியது. யாவும் கருதித் தெளிந்து கொள்க.



32. கங்கைக் கணிபுனிதக் காட்சியே காமருயர்
மங்கைக் கணிநாண் மகிமையே-செங்கைக்கு
யாரிடமும் யாதொன்றும் ஏற்காமை யாவர்க்கும்
சீருடைமை செய்ய அணி.

(ஙஉ)

இ-ள்

புனிதக் காட்சி கங்கைக்கு அழகு; விழுமிய நாணம் அழகிய மங்கைக்கு மகிமை: எவரிடமும் எதையும் ஏந்தி வாங்காமையே செவ்விய கைக்கு அழகு; சீர்மையான நீர்மையுடைமையே யாவர்க்கும் சிறந்த அழகு என்க.

உயர்ந்த நீர்மைகள் தோய்ந்து வரும் அளவே பொருள்கள் உயர்வாய்ச் சிறந்து திகழ்கின்றன.