பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

அனியறுபது


வாழ்நாட்கு அலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள் உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும் நிலவார் நிலமிசை மேல். (நாலடி, 22)

உங்கள் ஆயுள் நாளுக்கு அளவுகோலாய் அமைந்துள்ள சூரியன் நாளும் தவறாமல் எழுந்து வருகிறான். அவன் தோன்றி மறையுந்தோறும் நும் ஆயுள் தேய்ந்து மறைகிறது. முழுதும் மாய்ந்து படுமுன் நல்லதை ஒல்லையில் செய்து உயர்ந்து கொள்ளுங்கள் என இஃது உணர்த்தியுள்ளது,

தான் வாக்களித்த உறுதிமொழியைச் சரியாக நிறைவேற்றுபவனே நிறைந்த மதிப்பைப் பெறுகிறான். உள்ளம் துணிந்து ஊக்கி முயல்பவனுக்கு எல்லாக்காரியங்களும் இனிது முடிந்து வருகின்றன.


38. புந்திக் கணிநூற் பொருளாய்வே; போயமரும்

சந்திக் கணிசார் தருநிழலே;-மந்திரிக்குச் சொல்வன்மை கல்வி துணிவன் பெதிர்சூழும் நல்வன்மை தூய்மை அணி. (ஙஅ)

           இ-ள் 

மேலான நூலின் பொருள்களை ஆராய்தலே அறிவுக்கு அழகு. இனிய குளிர் மரநிழலே சந்திக்கு அழகு; கல்வி சொல் வன்மை துணிவு அன்பு சூழ்ச்சித் திறம் தூய்மை மந்திரிக்கு அழகு என்க.

பொறிநுகர்வு உடல் நிலையில் சிறிது சுகமாய்த் தோன்றி விரைந்து கழிந்து ஒழிவது; அறிவின்