பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

அணியறுபது



நுகர்வு உயிர் நிலையில் உயர்வாய் நின்று எவ்வழி யும் அதிசய இன்பங்களை என்றும் அருளி வரும்.

சந்தி = பொது நிலையமான பூங்கா. அந்திப் போதில் பலரும் போய்த் தங்கி அமைதியா யிருக்கவுரிய அந்த இடம் மலர் மணம் கமழ்ந்து குளிர் நிழல் அமைந்து எழில் நலம் நிறைந்து இனிது விளங்கிவரின் மாந்தர் மனம் மகிழ்ந்து வருவர்.

அரசனுக்கு உரிமைத் துணையாய் அமர்ந்து ஆலோசனைகள் கூறி வருகிற மதிமான் மந்திரி என நேர்ந்தரன். மந்திரம் = இரகசியம். மருமமான கருமங்களைத் தெளிவாக ஆய்ந்து செய்பவன் என்பது அந்தப் பெயருள் தோய்ந்துள்ளது. அரசுக்கு உரியதை ஆய்ந்து வரிசையுடன் ஒர்ந்து முடிப்பவன் அமைச்சன் என நேர்ந்து வந்தான்.

ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவது எய்தாமை முற்காத்தல் - வைகலும்
மாறேற்கு மன்னர் நிலையுணர்தல் இம்மூன்றும்
வீறுசால் பேரமைச்சர் கோள்.

(திரிகடுகம் 61)

குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்
மடியோம்பும் ஆற்ற லுடமை - முடி ஒம்பி
நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம்சேர்தல்
தேற்றானேல் தேறும் அமைச்சு.

(ஏலாதி 17)

நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு
எல்லையில் மருத்துவர் இயல்பின் எண்ணுவார்;
ஒல்லைவந் துறுவன உற்ற பெற்றியின்
தொல்லைநல் வினைஎன உதவும் சூழ்ச்சியார்: