பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அ ணி ய று ப து

107

மேலோரை. இவருடைய அறிவுரைகள் எவர்க்கும் உயர் நலங்களை அருளி வரும், உண்மை அறிவு வளர வளர உயிர் ஒளிபெற்று உயர்ந்து வருகிறது.

---

40.இம்மைக் கிசையே இனிய அணி; எய்த நின்ற
அம்மைக் கறமே அரிய அணி;-செம்மைசேர்
கேண்மைக் கணிகிழமை கீழாழை; கேடிலா
ஆண்மைக் கடக்கம் அணி.

(ச0)

இ-ள்

புகழே இம்மைக்கு அழகு; அறமே மறுமைக்கு அழகு; உரிமை குலையாமையே நட்புக்கு அழகு: அடக்கமே ஆண்மைக்கு மேன்மையான அழகுஎன்க.

ஒருவன் பெயரை உலகத்தார் உவந்து புகழ்ந்து வருவது புகழ் என வந்தது. பலரும் நலமுறும்படி அரிய இனிய செயல்களைச் செய்து வருபவனுக்கே சீரிய இசை இயல்பாய் நேரே சேர வருகிறது.

அறம் தருமம் புண்ணியம் நல்வினை என்று சொல்லி வருவன எல்லாம் ஒரு பொருளையே சுட்டி வருகின்றன. நெறி நியமங்களோடு ஒழுகி எவ்வுயிர்க்கும் இரங்கி எவ்வழியும் இதம் புரிந்து வருபவனே புண்ணியவனாய்ப் பொலிங்து திகழ்கிறான்.

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அருமறைப் பொருளே. (இராமாயணம்)

திருந்திய நல்லறச் செம்பொற் கற்பகம்
பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்
வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஒம்பு மின்
கரும்பெனத் திரண்டதோட் கால வேற்கணிர்!

(சீவகசிந்தாமணி)