பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணி ய று ப து

113


உயிர் எல்லாருக்கும் பிரியமானது. அது உயர்வாய் ஒளிபெற்று வருவது மானத்தை மருவி வரும் அளவே யாம்; ஆகவே அதனே உயிரினும் மேலாக மேலோர் யாண்டும் பேணி வருகின்றனர்.

ஊனமே யான ஊனிடை இருக்கும்

உயிரினத் துறந்தும்ஒண் பூணும்
மானமே புரப்பது அவனிமேல் எவர்க்கும்
வரிசையும் தோற்றமும் மரபும்;
ஞானமே யான திருவடி வுடையாய்!
ஞாலம் உள்ளளவும்நிற் றலினுல்;
ஈனமே உயிருக்கு இயற்கை ஆதலினல்
என்றனன் வீமனுக்கு இளையோன்.

(பாரதம்)

மகா வீரனான விசயன் மானத்தின் மகிமையையும், அதனைப் போற்றி வந்துள்ள மாட்சியையும் கண்ணனிடம் இன்னவாறு நன்னயமாய்க் கூறியுள்ளான். அரிய உயிரினும் மானம் பெரியது.

தன் வாழ்வு தலைமையாய் ஒளிபெற்று வர வேண்டுமானால் பழி அவமானங்கள் படியாமல் விழுமிய நிலையில் மனிதன் ஒழுகி வர வேண்டும்.


44

தேட்டுக் கணிதீமை சேராமை; செய்தமைந்த வீட்டுக் கணிநல்லோர் மேவுகையே;-- சூட்டுகின்ற மாலைக் கணிமன்னர் மார்பே; மறிதிரையே வேலைக் கணியாகும் மேல்.

௪௪

இ-ள்.

தீமை சேராமல் தேடி வருவதே பொருளுக்கு அழகு; நல்லோர் நண்ணுவதே வீட்டுக்கு அழகு;

15