பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

அ ணி ய று ப து



ஈகை அரிய பெரிய குணம். தான் முயன்று ஈட்டிய பொருளைப் பிறரும் அயின்று மகிழ்ந்து வர அருள் புரிந்து தருபவன் வள்ளல் என உயர்ந்து வருகிறான், ஈகை வழியே இசைகள் வருகின்றன.

வித்திய விதையிலிருந்து விளேவுகள் பெருகிவருதல் போல் ஈயும் பொருளிலிருந்து இன்பவளங்கள் பொங்கி விளைந்து வருகின்றன.

ஈகை இனிய தருமமாய் மருவி வருகிறது. ஆகவே ஈகையாளன் புண்ணியவானாய்ப் பொலிந்து திகழ்கிறான். இம்மையில் புகழும் மறுமையில் இன்பமும் அவனுக்கு நேரே உரிமைகளாகின்றன்.

தான் உண்ணுவது ஒருவன் உடலோடு ஒழிகிறது. பிறர் உண்ண ஈவது புண்ணியமாய்ப்பெருகி அவன் உயிர்க்கு இன்பநலன்களை அருளிவருகிறது.

We enjoy thoroughly only the pleasure that we give.
( Dumas)
நாம்பிறர்க்கு நல்குவதே நல்லவுயர் இன்பமா
நாம்உவந்து கொள்கின்றோம் நன்கு.
The best way to do good to ourselves, is to do it to others.
(Seneca)
நமக்குநாம் நன்மைசெய நல்ல்வழி என்றும் பிறர்க்கிதம் செய்வதே யாம்.

The riches we impart are the only wealth
we shall always retain.
(M. Henry)
பிறர்க்குநாம் தந்தபொருள் பேராத் திருவாய் உறப்பெறுகின்ருேம் உயர்ந்து.