பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

121


ஆண்டவனை நேரே அடைய மூண்டு முயன்ற மகான்கள் எல்லாரும் புலன்களை அடக்கி உள்ளத்தை ஒடுக்கி உயிரை உரிமையோடு ஓர்ந்து நோக்கியே உறுதி பூண்டு உய்தி பெற்றுள்ளனர்.

சினம்இறக்கக் கற்றாலும் சித்திஎல்லாம் பெற்றலும்
மனம்இறக்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே!
படிப்பற்றுக் கேள்விஅற்றுப் பற்றுஅற்றுச் சிந்தைத்
துடிப்பற்றார்க்கு அன்றே சுகம்காண் பராபரமே!

(தாயுமானவர்)

பூதங்கள் அற்றுப் பொறிஅற்றுச்
சார்ஐம் புலன்கள் அற்றுப்
பேதம் குணம் அற்றுப் பேராசை
தான் அற்றுப் பின்முன்அற்றுக்
காதங் கரணங் களுமற்ற
ஆனந்தக் காட்சியிலே
ஏதம் களைந்திருப் பேன் இறை
வாகச்சி ஏகம்பனே.

(பட்டினத்தார்)

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?

(பத்திரகிரியார்)

படிப்படக்கிக் கேள்விஎலாம் பற்றறவிட் டடக்கிப்
பார்த்திடலும் அடக்கியுறும் பரிசமெலாம் அடத்தித்
தடிப்புறும்ஊண் சுவைஅடக்கிக் கந்தமெலாம் அடக்கிச்
சாதிமதம் சமயமெனும் சழக்கையும்விட் டடக்கி
மடிப்படக்கி நின்றாலும் நில்லேனான் எனவே
வனக்குரங்கும் வியப்பஎன்றன் மனக்குரங்குகுதித்த
துடிப்படக்கி ஆட்கொண்ட துரையேஎன் உளத்தே
சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே!

(இராமலிங்கர்)

16