பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

அணியறுபது

நித்திய சுகங்கள் நிறைந்துள்ள சத்திய உலகம் எனத் திருக்குறள் எங்கும் தெய்வ ஒளிகளை வீசியுள்ளது. அங்கே ஆன்மானந்தமான அதிசய இன்பங்களை மதிநலம் கனியத் துய்த்து மகிழலாம்.

தமிழ் மொழியில் தோன்றியுள்ள இந்த இரண்டு நூல்களைப் போல் சால்புடைய மேலான நூல்களே வேறு எந்த மொழியும் பெறவில்லே. உலக மொழி கள் யாவும் இந்தத் தெய்வீகமான கலையின் திலக ஒளிகளே நோக்கித் திசைகள் தோறும் நசைகள் மீதுர்ந்து இசைகள் பாடித் தொழுது வருகின்றன.

இந்த உண்மையை இந்நாட்டு மக்கள் எண்ணி உணராமல் கண்மூடிக் கவிழ்ந்து மண் மூடிகளாய் மறுகி யுழலுகின்றனர். மடமையிருள் மண்டிக் கடமையை உணராமல் யாதும் கருதிக் காணாமல் களித்திருப்பது கழிபேரிழிவாய்ப் பெருகியுள்ளது.

மையல் மயக்கங்களில் மருண்டு வெய்ய பேய் களாய் விரிந்து உழந்தும் தம்மையும் மனிதர் என் அவர் தருக்கிக் களித்துப் பிலுக்கி வருவது இயற்கை வினோதமாய்க் கலித்து வருகிறது.

அறியாமை இருள். வாய்மொழியாய்த் தமிழ்மொழியை வளமையாய்ப் பேசுகின்றார்; வனப்பு வாய்ந்த தாய்மொழியின் தகைமைகளைத் தனிக்கலையின் நிலைமைகளைத் தருமம் நீதி தோய்மொழியாய் எவ்வழியும் சுவைகளே

சுரந்தின்பம் தோய்ந்து தெய்வம் ஆய்மொழியா யுள்ளதனைச் சரியாக அறியாமை அவமே அந்தோ! (1)