பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

125


இந் நாட்டின் சாபம்.

எந்நாட்டில் எம்மொழியில் திருக்குறள் போல்
ஒரு நூலை எய்தி இன்பம்
அந்நாட்டில் உள்ளவர்கள் அடைந்துள்ளார்?
யாண்டுமே இல்லை யன்றோ!
இந்நாட்டில் தம்முடைய தாய்மொழியின்
எழில்ஒளியை இனிது நோக்கித்
தந்நாட்டம் தெளியாமல் தாழ்ந்துள்ளார்.
தமிழ்நாட்டின் சாபம் என்னே!

(5)


இழி வழி.

பெறலரிய பெரும்பேறாப் பெற்றுள்ள
இப்பிறப்பின் பெருமை ஒரார்;
உறலுரிய அறநெறியே உயிர்க்குறுதி
என அதனை உவந்து கொள்ளார்;
அறலுறுபுன் குமிழிஎன அழிந்தொழியும்
உடலையே அவாவி நாளும்
இறலுரிய வழிகளிலே இழிந்துகழிந்
தொழிகின்றார் என்னே அம்மா!

(6)

விரைந்து தெளிக.

மாடாடாய் வனவிலங்காய்க் கழிந்திழிந்து
போகாமல் மனிதன் என்னும்
பீடான பிறவியை நீ பெற்றிங்கே
வந்துள்ளாய்! பிறப்பின் பேற்றை
நாடாமல், உயிர்க்குறுதி நண்ணாமல்,
நாளுமே பாழாய் வீழ
வீடாமல் விளிகின்றாய்! விளிவுநிலை
தெளிகநீ விரைந்து தேர்ந்தே.

(7)