பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

137

 வர் ஆதலால் மோனத்தை இவ்வாறு வியந்து குறித்திருக்கிறார். மோனம் ஞான யோகமாகிறது.

மோனிகளைப் பார்த்திமையா மோகமும் வெண்திங்கள்
மேனி அழகெழுதா மேல்பத்தி--யான
பதுமா தனன்கண்ணும் பானுவும்போல் தானாய்
எதிராகும் சொப்பனத்தி லும்.

(ஒழிவிலொடுக்கம்)

மவுனிகளை நோக்கி ஞானிகள் மகிழ்ந்து வருவதை இது புகழ்ந்துளது. மோனம் அதிசய மகிமைகளை அருளி வருதலால் இவ்வாறு அதனைப் பெரியோர்கள் துதி செய்துள்ளனர்.

Silence alone is great, all the rest is weakness.

(A. Vigny)

பேசா மவுனமே பேருயர்வு மற்றவெல்லாம்
ஈசல் எளிமை இளிவு.

If thou desire to be wise, be so wise as to hold thy tongue. (Lavater)

அரியவுயர் ஞானியா ஆக விரும்பின்
உரியவுன் நாவை ஒடுக்கு.

இவை ஈண்டு எண்ணி உணர வுரியன. மவுன நிலையை எவரும் மதித்துப் போற்றித் துதித்து வருவதை இவற்றால் அறிந்து கொள்கிறோம்.



53 யோகிக்குச் சாந்தம் உயரணி; ஓயாத
போகிக் கணிபொன் பொறிநுகர்வே;-தேகிக்குத்
தேக நிலையைத் தெரிதலணி; தேர்ந்தவர்க்கு

ஆகம் உறாமை அணி.
(ரு௩)

இ-ள்

சாந்தம் யோகிக்கு அழகு; பொறி நுகர்வுகள்

18