பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

139


பிறத்தல் இறத்தல் பெருந்துயரம்; இத்தை
மறத்தல் மதிகேடே யாகும்;-துறத்தலெனும்
தெய்வத் திருவுடையார் எய்துவர் மெய்யான
உய்வைத் தருவீ டுவந்து.

மதிகேடர் யார்? பேரின்ப வீட்டை அடையவுரியவர் எவர்? என்பதை இதில் அறிந்து கொள்கிறோம். துன்பம் யாதும் தோயாமல் என்றும் இன்பம் தோய்ந்துவர ஆய்ந்து புரிக.

பிறப்பு எந்த வகையிலும் எங்கும் துன்பமே. பிறவாமை ஒன்றே என்றும் குன்றாத பேரின்பமாம்.

எடுத்து வந்துள்ள இந்த அரிய மனிதப் பிறவிக்கு உரிய பெரிய பயன் யாது? எனின், அடுத்த எந்தப் பிறவியும் அடையாமல் செய்துகொள்வதேயாம். செயல் ஒருவிய அளவே அஃது எய்துகிறது.

பெறலரிய பெரும் பேறாப் பெற்றுவந்திருக்கின்ற இப்பிறப்பில் உயிர் துயருறாத வழியை நாடித் தப்ப இல்லையானல் வேறு எ வ் வ ழி யும் வெவ்விய துயரங்களே விளைந்துவிடும்.

யாதொரு நிலையுமின்றி விரைந்து அழிந்து ஒழிகின்ற உலகப் பொருள்களில் பற்று முற்றும் அற்றவரே பரம்பொருளைப் பற்றி உய்ய நேர்கின்றனர்.

ஆசை அற்ற யோகிகளே ஈசனைத் தோய்ந்து இன்பம் உறுகின்றனர். உறவே பி ற வி தீர்ந்து பேரின்ப நிலையைப் பெறுகின்றனர்.

சிந்தையது என்னச் சிவன்என்ன வேறில்லை
சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்