பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

141



தேனும் பாலும் கன்னலும்
அமுதும்ஆகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை உணர்ந்தேனே.

(திருவாய்மொழி : 8: 8)

நம்மாழ்வார் பரமனைக் கண்டு மகிழ்ந்து களித்துத் திளைத்துள்ள உண்மையை இதில் உணர்த்தியிருக்கிறார். கவியில் கனிந்துள்ள சுவைகளை உ ண ர் ந் து நுகர்பவர், உயர்ந்த தத்துவங்களைத் தெளிந்து வியந்து மகிழ்ந்து கொள்வர்.

தன்னைப் பேதம் ஆய்க்காண்கை
சகத்தில் காணப் பட்டதாம்;
தன்னைப் பேதம் அறச்சிவம் என்று
அறிவோன் ஞானி தான்ஒருவன்
என்னக் கருதி மறைஅதுநீ
யானாய் என்ன அத்துவிதம்
தன்னைப் புகலும்; கண்டதனைச்
சாற்றல் மறையின் கருத்தன்றே. (1)


தூய்தா கியநெஞ் சுடையார்க்குத்
தாமே சிவமாத் தோன்றுமால்
தீதா கியநெஞ் சுடையார்க்குத்
தெளிய அபேதம் இகலின்றி
வேதா கமங்கள் விளம்பிடினும்
விளங்காது என்றும் வேறுஎன்னும்
வாதால் அழிவர் அவர்மாயை
மயக்க மயங்கு மதியினார். (2)


நெஞ்சம் சோகம் பாவனையில்
நிற்க நிறுத்தி விடயங்கள்