பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

143


54.ஆன்ம உணர்வே அறிவுக் கணிஇனிய
பான்மை உயர்வே பதியணி-நோன்மை
உறுவது மேன்மைக் குயரணி அல்லல்
அறுவது நல்லோர்க் கணி. (ருச)

இ-ள்.

அறிவுக்கு அழகு ஆன்ம உணர்வே: உயர்ந்த தலைமைக்கு அழகு இனிய பான்மையே; மேன்மைக்கு அழகு நோன்மையே; நல்லவர்க்கு அழகு அல்லல் அறுவதே என்க.

உத்தம உணர்வு உய்த்துணர உற்றது.

அறிவை மருவிய அளவே எல்லா இனங்களும் பெருமை அடைந்து வந்துள்ளன. பலவகை நிலைகளில் அறிவு பரவி யுளது. உலக அறிவு வணிக அறிவு தொழில் அறிவு கலை அறிவு கணித அறிவு இயல் அறிவு இசை அறிவு பயிர் அறிவு உயிர் அறிவு என இன்னவாறு துறைகள்தோறும் அறிவு ஒளிபுரிந்து வருகிறது. இந்த வகையில் எந்த வழிகளில் தொழிலாற்றிவரினும் அந்த அறிவு பந்தம் உடையதே. தன் சொந்த நிலையை உணர்ந்தபோது தான் அந்தமில்லாத ஆனந்தத்தை அடைகிறது.

தன்னை அறிய நேர்ந்தபோது அந்த அறிவு இன்னல் நீங்கி இன்பம் மிகப்பெறுகிறது. தனது உண்மை ஒ ளி யா ன ஆன்மாவை உரிமையுடன் மருவிய அளவே அறிவு பெருமகிமை யுறுகிறது.

அறிவு அறிவுஎன்றங்கு அரற்றும் உலகம்
அறிவு அறியாமையை யாரும் அறியார்;