பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

145


அறிவுமயமாயுள்ள ஆன்மாவை அறிவதே அறிவாம். அதுவே பிறவித்துயரங்களை நீக்கிப் பேரின்பங்களை அருளும் என்பதை ஈண்டு அறிந்து கொள்கிறோம். மெய்யறிவை உறுவதே உயிர்க்கு உய்தி; அஃது உறாதவரையும் பிறவி அறாது; பேரிடரே விளையும் என்னும் உண்மையைத் தெளிந்து கொள்கிறோம்.

அறிவை அறிவதுவே ஆகும் பொருள் என்று உறுதிசொன்ன உண்மையினை ஓரும்நாள் எந்நாளோ?

மெய்யறிவைக் குறித்துத் தாயுமானவர் இவ்வாறு கருதியுள்ளார். மெய்யான ஞானமே பொய்யான புலையிருள்களை ஒழித்து தெய்வ நிலையான இன்பத்தை நேரே அருளுகிறது.

நோன்மை=பொறுமை; தவம்.

மேன்மையான தலைமை நோன்மையால் அமைவதால் அதற்கு இது அழகு என வந்தது. பொறுமை மருவி வரப் பெருமை பெருகி வருகிறது. அதிசய நிறைவுகள் யாவும் பொறையிடமே பொறுந்தியுள்ளன. அதனை மருவி வருபவர் மாதவராகின்றார்.

எல்லா உயிர்களுக்கும் இரங்கி நன்மை செய்பவர் நல்லவர் ஆகின்றார். ஆகவே அவர் அல்லல் யாவும் நீங்கி எவ்வழியும் இனியராய் எல்லா இன்பங்களையும் எளிதே எய்துகின்றார்.

“அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லே”
(குறள், 245)

பொருள் பொதிந்து வந்துள்ள இந்த அருள்

19