பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

147


எல்லா உயிரினங்களும் எவ்வழியும் தமக்கு இன்பமே வேண்டும் என்று கருதி வருகின்றன. கருதியவாறு காணாமல் எங்கும் மறுகி யுழல்கின்றன. காரணம் என்ன? வழிவழியாகவே மனம் மொழி மெய்களை நல்ல வழிகளில் பழக்கி நலம் புரிந்து வந்தவரே இன்ப நலன்களை எய்தவுரியவராகின்றார்; அவ்வாறு பழகாமல் அல்வழியில் இழிந்து அல்லல்புரிய நேர்ந்தவர் எவரும் யாண்டும் துன்பம் தோயவே நேர்ந்துள்ளனர்.

எனைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.

(குறள், 207)

எத்தகைய கொடிய பகைகளுக்கும் தப்பி உய்யலாம்; தாம் செய்த வினைப்பயனை அனுபவியாமல் யாரும் யாதும் தப்ப முடியாது எனத் தேவர் இவ்வாறு விதி நியமத்தை நன்கு விளக்கியிருக்கிறார்.

பிற உயிர்களுக்கு இடர் செய்கின்றவன் தன் உயிர்க்கே கொடிய துயரங்களை விளைத்துக்கொள்ளுகிறான். விளைவு தெரியாமல் வெறியனாயுழல்கிறான்.

பிறர்க்குஇன்னா செய்தலின் பேதைமை இல்லே;
பிறர்க்குஇன்னாது என்றுபேர் இட்டுத்-தனக்கின்னா
வித்தி விளைத்து வினைவிளைப்பக் காண்டலின்
பித்தும் உளவோ பிற.

(அறநெறி)

பிறர்க்குத் துன்பம் செய்வதினும் .கொடிய மடமை வேறு யாதும் இல்லை; தான் செய்த துயர் ஒன்று நூறாய்ப் பெருகித் தன்னை வந்து வருத்துமே! என்பதை உணராமையால் அந்த முழுமூடன் அவ்-