பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

அ ணி ய று ப து



57. சித்தத்தின் சுத்தியே தெய்வம் நேர் சேர அணி;
பத்தி வலையே பரமனைப் பற்ற அணி;
தத்துவ ஞானமே தன்னைத் தலைவனைச்
சத்தியமாக் காண அணி. (ருஎ)

இ-ள்.

தெய்வத் திருவருளை நேரே சேர்தற்குச் சித்த சுத்தியே அழகு: பரம்பொருளை எளிதே பிடித்தற்குப் பத்திவலையே அழகு; தன்னையும் த் தலைவனையும் தெளிவாக அறிதற்கு தத்துவ ஞானமே அழகு என்க. தன்னை = உயிரை.தலைவனை=இறைவனை.

மனம் மாசு படிந்துவர மனிதன் நீசம் அடைந்து இழிகிறான். அது தூய்மை தோய்ந்த பொழுது அதிசய மகிமைகள் அவனிடம் பெருகி வருகின்றன.

பெறலரும் பேறாக மனிதப் பிறப்பைப் பெற்று வந்துள்ளவன் அதனால் பெறவுரியதை விரைவில் பெறவேண்டும். அரிய இந்தப் பிறவிக்கு உரிய பெரிய பேறு யாது? எனின் மீண்டும் பிறவாமையே. பிறவா நிலையில் பிறந்த பிறவியே பேரின்பப் பிறவியாம்.

பிறந்தும் இறந்தும் ஓயாமல் உழந்து திரிகிற அவலப் புலைகளை பிறவிகள் என்று பேர்பெற்றிருக்கின்றன. இந்த அல்லல்கள் அறவே ஒழியவேண்டுமானால் உள்ளம் துயதாய் உணர்வு தெளியவேண்டும். மாசற்ற மனமே ஈசனுக்கு இனிய நிலையமாகிறது. ஈசனாக வுரிய மருமம் இனிது அறிய வந்தது.