பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

157

 ஞானக் காட்சியின் மாட்சிகளை இவை நன்கு விளக்கி யுள்ளன. பொருள் நயங்களைக் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும்.


58.பிறப்புக் கணிபின் பிறவாமை;பெற்ற
சிறப்புக் கணிசெருக் கின்மை;-இறப்புக்கோ
அல்லல் உறாமல் அமைதியாய் ஆதலணி; ::நல்லசெயல் யார்க்கும் அணி.

(ருஅ)

இ-ள்

.

பின்பு பிறவாமையே பிறவிக்கு அழகு: செருக்கு இல்லாமையே சிறப்புக்கு அழகு வேதனை யுறாமல் வீதலே இறப்புக்கு அழகு; நல்லவை செய்தலே எல்லார்க்கும் இனிய அழகு என்க.

அல்லல் உறாத அமைதிகள் அறிய வந்தன.

பிறவா யாக்கைப் பெரியோன் என்பது இறைவனுக்கு ஒரு பெயராய் வந்துள்ளது. இத்தகைய ஆண்டவனிடமிருந்து பிரிந்து வந்து சீவன் பிறவித் துயரங்களில் அழுந்தி உழந்து திரிகிறது. சித்தம் தெளிந்து தனது நிலைமையை உணர்ந்து மீண்டும் பிறவாதபடி முத்தியை அடைந்து கொள்வதே அரிய பிறவியால் பெற வுரிய பெரிய பேறாம்.

செல்வச் செருக்கு, கல்வித்தருக்கு, குலத்திமிர்,அதிகார மமதை, பதவி இறுமாப்பு என்பன பெரிய மனித இனத்தை எவ்வழியும் இறுகப் பற்றிச் சிறிய புலையாக்கிச் சீரழித்து விடுகின்றன.

சிறப்பு=கல்வி செல்வங்களால் ஆன பெருமை.