பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

அ ணி ய று ப து


பிறந்தவருடைய துன்பப் புலைகளையும், பிறவாதவருடைய பேரின்ப நிலைகளையும் இதில் நேரே தெளிவாக அறிந்து கொள்கிறோம்.

பிறந்துமண் மீதில் பிணியே
குடிகொண்டு பேரின்பத்தை
மறந்துசிற் றின்பத்தின் மேல்மயல்
ஆகிப்புன் மாதருக்குள்
பறந்துழன் றேதடு மாறிப்பொன்
தேடிஅப் பாவையர்க்குஈந்து
இறந்திட வோபணித் தாய்இறை
வா! கச்சி ஏகம்பனே!

(பட்டினத்தார்)

பிறந்தவர் வெய்ய வேதனைகள் தோய்ந்து மையல் மயக்கங்களில் அழுந்தி இழிந்து உழலுகின்ற நிலைகளைப் பட்டினத்தார் இவ்வாறு பரிவோடு சுட்டிக் காட்டியிருக்கிறார்.பிறவிப் பெருங்கடல் என்றும் பெரிய துன்பக் கடலே.

ஆய்வுறு பெருங்கடல் அகத்து ளேயவன்
பாய்திரை வருதொறும் பரிதற் பாலனும்
தீவினைப் பிறவிவெம் சிறையில் பட்டயாம்
நோயுறு துயர்என நுடங்கல் நோன்மையோ?

(இராமாயணம் 3-9-87)

கடலில் விழுந்தவன் அலைகளால் அலைக்கப்படுதல்போல் பிறவிக் கடலில் விழுங்தவன் துயரப் புலைகளால் துடித்து அயர்கின்றான் என இராமர் இவ்வாறு உள்ளம் உளைந்து உரைத்துள்ளார்.

துன்பம் யாதும் தோயாமல் இன்பம் எய்த வேண்டுமானால் பிறவாமையை யாண்டும் மறவாமல் உரிமையுடன் மருவிக் கொள்ள வேண்டும்.