பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ ணி ய று ப து

21


னும் இது ஈண்டு எண்ணி யுணர வுரியது. கண் ஒடிக் காணும் காட்சியில் தோன்றும் மாட்சியான கருணை கண்ணொட்டம் என வந்தது.


கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம்; காமுற்ற
பெண்ணுக் கணிகலம் நாணுடைமை; - நண்ணும் ::மறுமைக் கணிகலம் கல்விஇம் மூன்றும் - ::குறியுடையார் கண்ணே யுள.

(திரிகடுகம் 52)

பண்ணுக்கு வாம்பரித்தேர் ஆதபனும்
பணிந்துபசு பதியை நோக்கி
மண்ணுக்குத் தவம்புரியும் தனஞ்சயற்குக்
கோடையினும் மதியம் போன்றான்
எண்ணுக்கு வரும்புவனம் யாவினுக்கும்
கண்ணாவான் இவனே அன்றே
கண்ணுக்குப் புனைமணிப்பூண் கண்ணோட்டம்
என்பதெல்லாம் கருணை அன்றோ?

(பாரதம், அருச்சுனன்தவம் 43)

கண்ணுக்கு இனிய அணிகளை இவை காட்டியுள்ளன. கருணை தோய்ந்ததே கண் ஆகின்றது.

இமயமலைச் சாரலில் நின்று சிவபெருமானகக் கருதி அருச்சுனன் அருந்தவம் புரிந்தான். அவன் மீது அருள்புரிந்து சூரியனும் குளிர்ந்திருந்தான். எல்லா உலகங்களுக்கும் கண்ணா யுள்ள அவன் இவன் பால் கண்ணோடிக் கருணை புரிந்துள்ளான். அவ்வுண்மையை ஈண்டு உணர்ந்து உவந்து கொள்கிறோம்.

கண்ணோட்டம் என்பது கருணேயே; அதுவே கண்ணுக்கு உரிய இனிய அணிகலம் என்று குறித் திருப்பது இங்கே கூர்ந்து ஓர்ந்து சிந்திக்கவுரியது.