பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அணியறுபது

23


வள்ளல் மாற்றுயர்ந்த தங்கம்: உலோபி துருப்படித்த இரும்பு என இது குறித்துளது. ஈகை தன்னே யுடையானை உயர்த்தித் தேவனுக்கிப் பொன்னுலகில் வாழச் செய்கிறது: உலோபம் தன்னைத் தொட்டவனைக் கெட்டவனாக்கித் தாழ்த்தி ஆழ்த்தி நரகத்தில் வீழ்த்தி விடுகிறது.

ஈந்து உயர்க: ஈயாமல் இழிந்து போகாதே.

அருள் ஈந்த கண்ணும்; பொருள் ஈந்த கையும் தெய்வத்திருவருள் எய்தி உய்வைப் பெறுகின்றன.

கற்பு பெண்ணுக்கு அணி என்றது அதன் அற்புத நிலைகளே எல்லாம் ஆய்ந்து அறிந்து தெளிய.

நெறி திறம்பாத நிறையுடைமை பெண்மைக்குப் பெருமகிமைகளே நேரே அருளி வருகின்றது.

தான் மணந்து கொண்ட கணவன் ஒருவனிடமே உரிமையான காதலுடையவள். வேறு எந்த ஆடவரையும் சிந்தை யாலும் தீண்டாத செம்மை உள்ளம் உள்ளவளே பதிவிரதை, உத்தமி; கற்புடையாள் என ஒளி மிகப் பெற்று உயர்ந்துள்ளாள்.

உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று.

(தொல்காப்பியம்)

உண்மையான பெண்மைக்குக் கண்ணும் உயிரும் எவை? நாணமும் கற்புமேயாம் என இ.து உணர்த்தியுளது. செயிர்தீர் காட்சி என்றது. கற்பை அவர் கருதிக் காத்து வருகிற உறுதியுண்மைகளே நன்கு ஓர்ந்து உணர வந்தது.