பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

29


ஆட்சியினில் அதிசயனாய் ஆய்வுரையில்

அரியவனாய் அமர்ந்து செங்கோல்

ஓச்சிவரின் அவன்மாட்சி உலகமெலாம்

ஒளிவீசி உலாவு மன்றே.                   (5)
மன்னரின் மாட்சிகளை விளக்கி வந்துள்ள இவை யாவும் ஈண்டு எண்ணி உணர வுரியன. நாட்டை நலமா ஆள வுரியவர் பல வகை நிலைகளிலும் உயர்ந்து இனிமையும் வலிமையும் திறமையும் தெளிவும் உடையராய் அமையின் அங்கே மாந்தர் உவந்து சிறந்து உயர்ந்து நன்கு வாழ்ந்து வருவர்.
இன்னவாறே பிறவும் வரைய நேரின் உரை மிகவும் விரியும்; ஆதலால் இனிமேல் சுருக்கமாய் வரும். வரினும் யாவும் யூகித்து உணர்ந்து கொள்ள வேண்டும். மதியூகம் மகிமைகளை அருளி வரும்.

2. மனத்துக் கணிதூய்மை வாய்க்கணி வாய்மை

  தனத்துக் கணியே தருமம்-வனத்துக்கு 
  மாதவர்கள் வாழ்வதணி மாதவர்க்கு ஞானமே 
  ஆதர வான அணி.                    (உ)
                 இ-ள். 

தூய்மை மனத்துக்கு அணி; வாய்மை வாய்க்கு அணி; தருமம் தனத்துக்கு அணி: மாதவர்கள் வனத்துக்கு அணி; ஞானம் மாதவர்க்கு அணி என்க.

மனம் முதலியன இனமா அறிய வங்தன. 
தூசிதோயாதது தூய்மை ஆகியது. சித்தசுத்தி அதிசய மகிமை யுடையது. எல்லா கன்மைகளும் அதனால் விரைந்து விளைந்து வருகின்றன.