பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அணியறுபது

 உரிய கடமைகளைப் பிரியமுடன் செய்து, பருவம் தவறாமல் கலைகளைப் பயின்று தெளிந்து, தாய் மொழியை வாய்மொழி அளவில் பேசுவதோடு நில்லாமல் அதில் பொதிந்துள்ள உணர்வொளிகளை ஒர்ந்து தேர்ந்து, சால்பு நிறைந்து சீலம் தோய்ந்து செம்மையாய் வாழ்ந்து வருபவரே சிறந்த மேலோராய் எவ்வழியும் உயர்ந்து திகழ்கின்றனர்.

4.கற்றார்க் கொழுக்கமே காமரணி கல்லாமல்
உற்றார்க் கணியுயர்நூற் கேள்வியே-பெற்றார்க்குப்
பேரணதம் மக்கள் பெருவாழ்வே மற்றவர்க்குச் :சீரணியன் னார்பணியே தேர்.

(ச)

இ-ள்.

நூல்களைக் கற்றவர்க்கு நல்ல ஒழுக்கமே அழகு; அவ்வாறு கல்லாதவர்க்கு உயர்ந்தார் வாய்க் கேள்வியே அழகு; தம்பிள்ளைகளைப் பெருமையா வாழச் செய்வதே பெற்றவர்க்கு அழகு; தம்மைப் பெற்ற தாய் தந்தையர்க்குப் பணிபுரிவதே மக்களுக்கு அழகு என்க. உரிய கடமைகள் உணர வந்தன.

ஒழுக்கம் என்பது நெறி முறையே நீதியாய் ஒழுகி வரும் நீர்மை. மனிதனை இது மகிமைப்படுத்தி வருகிறது. கல்வி யறிவு எவ்வளவு சிறந்த தாயிருந்தாலும் ஒழுக்கம் இல்லையானல் அவன் இழிக்கப்படுகிறான். ஒழுக்கம் தோய்ந்த அளவே எவரும் விழுப்பமுடையராய் உயர்ந்து திகழ்கின்றார்.

கேள்வி என்பது மேலோர் கூறுகிற

அறிவுரைகளை ஆர்வத்தோடு கேட்பது. செவிவழியே எளிதே.