பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அணியறுபது

ஊழி அளவும்நீ ஊழியங்கள் செய்தாலும் தாழுமே தாய்முன் தணிந்து.

(அரும்பொருள முதம்)

இளமையில் ஒரு நாழிகை நேரம் தாய் உன்னைப் பேணி யருளியமைக்கு ஊழி காலம் நீ ஊழியங்கள் செய்தாலும் அதற்கு ஈடாகா என்னும் இது ஈண்டு எண்ணி யுணர்ந்து மக்கள் இனிது தெரிய வுரியது.


5.சொல்லுக் கணியினிமை தூய்மையே செய்கையணி
மல்லுக் கணிமாறா வன்மையே-வில்லுக்கு :மாட்டும் குறிபிழையா மாண்பே அணிமதிக்குக் :காட்டும் தெளிவணியே காண்.

(ரு)

இ-ள்.

இனிமை சொல்லுக்கு அணி; தூய்மை செயலுக்கு அணி; வன்மை மல்லுக்கு அணி; குறிதவறாமை வில்லுக்கு அணி; தெளிவு மதிக்கு அணி என்க.

வாயிலிருந்து வெளியே வருகிற சொல் நல்லதானால் அந்த மனிதன் நல்லவனாகிறான்: தீயதானல் தீயவனாகிறான். தான் நன்மை அடைய விரும்புகிற ஒருவன் தீமையான வார்த்தைகளை யாண்டும் பேசலாகாது. இனிமையான சொல் தனி மகிமைகளை அருளி வருதலால் அந்த மனிதன் எவ்வழியும் செவ் வியனாய்ச் சிறந்து உயர்ந்து திகழ்கின்றான்.

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத் துள்ளதூஉம் அன்று.

(குறள் 641)

நல்ல சொல்லைப் பேசி வருகிற

நாவையுடையவன் எல்லா மேன்மைகளையும் எளிதே அடைந்து