பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அணியறுபது

 உள்ளன்பும் உழுவலன்பும் உழையன்பும் முறையே உரிமையாய் மருவி யுள்ளன. அந்த அன்பின் அளவே துணைவரின் அழகும். உள்ளம் கனிந்துவர உரிமை சுரந்து இனிமை நிறைந்து வரும்.

நிறைந்த கல்வியின் நிலைமை சிறந்த சொல்வன்மையால் வெளியே தெளிவாய்த தெரிய வருகிறது; வரவே அதற்கு இது அணி என வந்தது.

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார்.

(குறள் 650)

தாம் கற்றதைப் பிறர் உணர்ந்து மகிழச் சொல்ல இயலாதவர் மணம் இல்லாத மலர் போல் மதிப்பிழந்து படுவர் என இஃது உணர்த்தியுளது.


எத்துணைய ஆயினும் கல்வி யிடமறிந்து உய்த்துணர் வில்லெனின் இல்லாகும்-உய்த்துணர்ந்தும்
சொல்வன்மை இன்றெனின் என்னாகும்? அஃதுண்டேல்
பொன்மலர் நாற்றம் உடைத்து.

(நீதிநெறி 5)

சொல் வன்மை இல்லையானால் கல்வி யறிவு புல்லிதாம்; அதனையுடைய கல்வியே மணம் உடைய பொன் மலர் போல் மாண்பு மிகுந்து யாண்டும் மதிப்புடன் விளங்கும் என இது விளக்கியுளது.

நினை என்றது நாணத்தின் தகைமைகளை நாடியுணர. பெண்மைக்கு உண்மை உயிர் அறிய வங்தது.

பயிர்களை வேலி காத்தல் போல் உயிர்களை நாணுடைமை காத்து வருகிறது.கண்ணுக்கு இமை: பெண்ணுக்கு நாணம் என்பது முதுமொழி.