பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அணியறுபது


இயல்பாயமைகிறது. அரிய மாதவராய் அதிசய மேன்மைகளை அவர் அடைந்து கொள்ளுகின்றார்.

வேற்று வேந்தரிடம் அஞ்சாமல் சென்று உறுதியுண்மைகளை நேரே தீரமாய்க் கூறி எந்த வகையிலும் யாதும் சிந்தை தளராமல் ஆண்டகைமையுடன் மீண்டு வருபவனே தூய தூதுவன் ஆகின்றான்.

இலங்கை வேந்தனிடம் அங்கதன் தூது சென்றிருந்தான். பெரிய அரசபதவியைத் தருவதாக ஆசைகாட்டி இவ் வீரனை அவ்வரசன் வசப்படுத்த முயன்றான். அவனது ஊதிய வார்த்தையைக் கேட்டதும் இராம தூதன் ஆர்த்துச் சிரித்தான். அதிசய வீறோடு பார்த்து நேரே பதில் உரைத்தான்.

இராவணன் சொன்னது

அந்நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லே;
உன்அரசு உனக்குத் தந்தேன் ஆளுதி ஊழி காலம்
பொன்னரி சுமந்த பீடத்து இமையவர் போற்றி செய்ய மன்னவன் ஆக யானே சூட்டுவன் மகுடம் என்றான்,

அங்கதன் இசைத்தது

அங்கதன் அதனைக் கேளா
அங்கையோடு அங்கை தாக்கித்
துங்கவன் தோளும் மார்பும்
இலங்கையும் துளங்க நக்கான்;
இங்குநின் றார்கட் கெல்லாம்
இறுதியே என்ப துன்னி
துங்கள்பால் நின்றும் எம்பால்
போந்தனன் உம்பி என்றான்: (1)