பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அணியறுபது


தன் நாட்டில் உள்ள மாந்தர் சுகமாய் வாழ்ந்து வர ஒர்ந்து பேணி வருவதே வேந்தன் கடமையாம்: அதை ஆற்றிவரும் அளவு அவன் ஏற்றம் மிகப் பெறுகிறான். குடி மகிழச்சியேகோனின் உயர்ச்சி.

மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன
மகிழ்வொடு தாங்கியா ரேனும்
இன்னலுற் றயர்ந்தோம் எனக்கலுழ்ந் திடில்தன்
இருவிழி நீரினே உகுப்பான்;
அன்ன வெந் துயரை நீக்குமுன் தான்ஒன்று
அயின்றிடான் துயின்றிடான் எவரும்;
நன்னகர் எங்கும் உளன் எனப் பகர
நாடொறும் இயங்குவோன் கோனே.

கோனின் குண நீர்மைகளே இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்பவர் உள்ளம் வியந்து மகிழ்வர்.

இன்னவாறு பேணி வருகிற மன்னனே மக்கள் என்னவாறு போற்றி வர வேண்டும்! அவனுடைய ஆதரவான நீர்மை சீர்மைகளே அறிய நேர்ந்தவர் எவ்வழியும் பிரியமாய் அவனேத் தொழுது வாழ நேர்வர். மக்கள் வாழ்வு மகினால் உயர்கிறது.

நம்மனை மைந்தர் கிரகவாழ் வெல்லாம்
நரபதி யால்; அவன் இலனேல்,
அம்மனை தீயர் கைவசம் ஆவள்;
அருநிதி கொள்ளையாம்; நாளும்
வெம்மையோடு ஒருவர் ஒருவரை உண்பார்;
மேலவர் அசடரால் மெலிவார்;
அம்மஈ தெல்லாம் உணர்ந்து அரசு ஆணைக்கு
அமைதல் நற்குடிகளின் இயல்பே.

(நீதிநூல்)