பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

45

 நல்ல குடிகளின் தன்மை நன்மைகளை இது நன்கு காட்டியுள்ளது. வேந்தர்க்கு அணியும், மாந்தர்க்கு அழகும் ஈங்கு ஒர்ந்து உணர்ந்து கொள்ள வந்தன. மன்னுயிர் உயர மன்னன் உயர்கிறான்.

சோம்பல் மனிதரைத் தீம்பராக்கிக் கெடுத்து விடும்: சோம்பாத முயற்சி எல்லா உயர்ச்சிகளையும் இயல்பாக் கொடுத்தருளும் ஆதலால் மடியின்மை மனிதருக்கு இனிய அணி என அமைந்தது.

மடி=உள்ளம் மடிந்து ஊக்கம் ஒடிந்துள்ள ஊனநிலை. இந்த ஈனம் இல்லாதவர் மான மனிதராய் மாண்பு சுரந்து மகிமை யுறுகின்றனர்.

பிறரைப் பழித்துப் பேசுவது பெரிய பிழை. பழி கூறுபவர் எவ்வழியும இழிவே அடைகின்றனர். ஒரு மனிதன் உயர்ந்த பெருந்தகையாளன் என்பதற்குச் சிறந்த அடையாளம் யாது? எனின், யாரையும் பழியாத விழுமிய மேன்மையே.

கோனின் நீர்மை, குடியின் சீர்மை, மடியுறாத மாண்பு, பழியுரையாத பண்பு இங்கே தெளிவுற வந்தன. விழுமிய பான்மை எழுமையும் மேன்மை.


11.கொல்லாமை யேஅறத்தின் கூரணி; கோதுபுறம்
சொல்லாமை யேசிறப்பின் சூழணி;-நில்லாமை
உள்ளலே உண்மை உணர்வுக் கணிபுகழ்க்கு
வள்ளலே வாய்த்த அணி.

(க.க)

இ-ள்.

எவ்வுயிரையும் கொல்லாமையே அறத்திற்கு