பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

47


என்றே தேவர் எவ்வழியும் கருணையோடு போதித்து வருகிறார். அந்த வரவில் இந்தவாறு கூற நேர்ந்தார்.

ஒருவன் உயர்ந்த குடியில் பிறந்த பெருந்தகை என்பதற்குச் சிறந்த அடையாளம் யாரையும் இகழ்ந்து கூறாமையேயாம். ஆகவே சிறப்பின் சூழ் அணி என ஈண்டு இது கூற வந்தது.

நிலை யுள்ளது, நிலை இல்லது என்னும் நிலைமைகளை நினைந்து தெளிந்து கொள்வதே உண்மையான உயர்ந்த விவேகமாம். இந்த மெய்யறிவு உய்தியை அருளுதலால் இதனே அடைந்தவர் அதிசய இன்பம் அடைகிறார்; அடையாதவர் கடையா யிழிகின்றார். நித்திய அநித்தியங்களை அறிபவர் நித்தராகிறார்.

சென்றது காலம்; சிதைந்தது இளமைநலம்; ::நின்றது சாவுஎன்று நினைந்துருகி-மன்றில் ::நடிக்கின்ற பால்வண்ணர் நாமம்எண்ண ::மாந்தர் படிக்கின்ற நூல்எல்லாம் பாழ்

.

ஒரு மன்னன் இவ்வாறு மறுகி உரைத்துள்ளான். உரையுள் உணர்வுறுதி ஒளி வீசியுளது.

நீரில் குமிழி இளமை; நிறைசெல்வம்
நீரில் சுருட்டு நெடுந்திரைகள்;-நீரில் ::எழுத்தாகும் யாக்கை; நமரங்காள்! என்னே ::வழுத்தாதது எம்பிரான் மன்று?

(நீதிநெறி)
நிலையாமை நிலைகளை நினைந்து நிலையாயுள்ளதைத் தழுவி உய்யும்படி உலகமக்களுக்கு இவ்வாறு பெரியோர்கள்.உறுதிநலனை அருளியுள்ளனர்.
உண்மை உணர்வுக்கு அழகு உணர வந்தது.