பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அணியறுபது


பிணியை விரைந்து நீக்குவதே சிறந்த மருந்துக்கு அழகு. ஆனவரையும் எவரையும் சாராமால் தன்மானமாய் முயன்று தனி ஆண்மையுடன் இனிது வாழ்வதே உயர்ந்த மனித வாழ்வாம்.


13. தானைக் கணியமைந்த தந்திரிஅத் தந்திரிக்கு
மானத் தறுகண்மை மாணணி-யானைக்கு ::வேந்தமர்ந்து மீது விளங்கலணி அவ்வேந்துக் ::கேந்துமுடி இன்னணியா மே.

(கஙு)

இ-ள்

.

சேனைத் தலைவன் சேனைக்கு அழகு; அந்தச் சேனாதிபதிக்குத் திண்ணிய வீரம் அழகு; மன்னனைத்தாங்கி வருவது மதயானைக்கு அழகு; அந்த வேந்தனுக்கு வியனை மணிமுடி அழகு என்க.

தந்திரம்=படை, தந்திரி=படைத்தலைவன்.

படைகள் பலவாய்த் திரண்டு எவ்வளவு வலிகளையுடையன வாயினும் தக்க தலைவன் இல்லையானல் அவை நிலைகுலைந்து சிதைந்த போம்.

தளபதி இல்லாத தளம்
கரையில்லாத குளம் என்பது பழமொழி.


நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்.

(குறள், 770)

சேனைத்தலைவர் இல்லையானால் சேனைகள் சீரழிந்துபோம் என நாயனார் இவ்வாறு

கூறியுள்ளார். தானைக்கு உயிர் நிலை தெரிய வந்தது.