பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அணியறுபது


பாட்டுக்கு இனிய அழகு வசையுறாத வாழ்வே யாவர்க்கும் அரிய பெரிய அழகு என்க.

நல்லார் என்றது நல்ல குணநலன்களையுடைய மேலோரை. அறிவு ஒழுக்கம் அருள் பொறை வாய்மை முதலிய நல்ல நீர்மைகள் நிறைந்த பெரியோர்களைப் பெற்றுள்ள நாடே அரிய பெரிய மகிமைகளை அடைந்து எவ்வழியும் சிறந்து வருகிறது.

நாடாகு ஒன்றோ காடுஆகு ஒன்றோ
அவலாகு ஒன்றே மிசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்ல வாழிய நிலனே!

(புறம், 187)

ஒ நிலனே! நீ நாடாயிருந்தாலும், காடாயிருந்தாலும், பள்ளமாயிருந்தாலும், மேடாயிருந்தாலும் எங்கே நல்ல ஆண்மக்கள் உள்ளனரோ அங்கே நீ நல்லவளாயிருக்கின்றாய்! எந்த இடத்தில் நன்மக்கள் இல்லையோ அந்த இடத்தே நீ புன்மையாயுள்ளாய் என்று ஒளவையார் இவ்வாறு பூமிதேவியை நோக்கி உரிமையோடு நேம நிலை தெரியப் பேசி யிருக்கிறார்.

அவல் = பள்ளம். மிசை=மேடு.

தம்பால் வாழும் மக்களின் நல்ல நீர்மைகளைப் பொறுத்தே ஊரும் நாடும் உயர் மதிப்படையும் என்பதை இதனால் உணர்ந்து கொள்கிறோம். இராமபிரான் போன கானகம் வானகமாய் விளங்கியது.

நல்லவர் சிலர் இருந்தாலும் அந்த நாடு எல்லா வகையிலும் உயர்ந்து எங்கும் நலம் பல தருகிறது.

நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல்லுலகில்