பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணி ய று ப து

57


கூறுவது கோள் என வந்தது. பழியான கோளைக் கேட்பதால் உள்ளம் கெடும்; அதனால் இழிவே நேரும். பாழான அந்தக் கோள் வாயனை யாதும் அணுக ஒட்டாமல் அகற்றி விடுவதே நல்லது.

வாள் செய்யும் கொலையைவிடக் கோள் செய்யும் புலை கொடியது. கண் எதிரே நீட்டுகிற வாளுக்குத் தப்பி விடலாம்; காணாமல் மூட்டுகிற கோளுக்குத் தப்ப முடியாது. கோளன் கொடிய கொலை பாதகன்; நெடிய நீசப் பாவி ஆகிறான்.

தேளும் கொடும்பாம்பும் தீண்டிமிதித் தாலன்றி
வாளாமெய் தீண்டி வருத்தாவே—கோளார்ந்த
புல்லியரோ வீணே புனிதர்க்கும் பொய்ப்பழிமேல்
சொல்லி விளைப்பர் துயர்.  (தருமதீபிகை, 142)

தேளினும் பாம்பினும் கோளர் தீயர் என இது குறித்துள்ளது. தேளைத் தொட்டால் கொட்டும்: பாம்பை மிதித்தால் கடிக்கும். யாதொரு இடரும் செய்யாத நல்லவருக்கும் பொல்லாத புலைகளைக் கூறிக் கோளர் கொடிய கேடுகளை விளைத்து விடுவர். ஆதலால் இந்த நீசப் பாம்புகள் நாட்டுக்குத் தீயநாசங்களேயாம். தீய நெஞ்சரைத் தீயினும் அஞ்சுக.

கொடியவிடப் பாம்பினுமே கோளன் கொடியன்;
கொடியஅது தீண்டினரைக் கொல்லும்—கொடியஇவன்
வாயொருவன் காதோரம் வைக்குமுன்னே ஐயகோ !
மாயுமே மற்றை யவன். (தருமதீபிகை, 143)


இதில் குறித்துள்ள குறிப்புகளைக் கூர்ந்து ஓர்ந்து கொள்பவர் கோளரின் கொடிய நீச நிலைகளை

8