பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அணியறுபது


உணர்ந்து கொள்வர். பொல்லாத வாளினும் புலையான கோள் கொடியது; ஆகவே கோளர் எவ்வளவு கொடிய கொலை பாதகர் என்பது தெளிவாம்.

யாண்டும் தோல்வியுறாமல் எவ்வழியும் வெற்றி பெற்று வருவதே ஒருவன் உற்ற தோள்வன்மைக்கு மேன்மை. இராமனும் வீமனும் விசயனும் இந்த வழியில் சிறந்துள்ளனர். அந்த உண்மைகளை நூல்கள் துலக்கியுள்ளன.

இரந்து வாழப் பிறரிடம் விழைந்து செல்வது பிழையான பெரிய இழிவு: அவ்வாறு போகாமல் ஆனவரையும் முயன்று வாழ்பவனே மானமும் மதிப்பும் உடையனாய் எங்கும் உயர்ந்து வருகிறான்.

தாளாண்மையே தாளுக்கு அழகு. அதைவிட்டு விலகி விணை இரக்க நேரின் ஈனமே விளையும். ஈ என இரந்தான் ஈ என இழிந்தான்.

சினக்கதிர்வேல் கண் மடவாய்! செல்வர்பால் சென்றுஈ
எனக்கென்னும் இம்மாற்றம் கண்டாய்-தனக்குரிய
தானம் துடைத்துத் தருமத்தை வேர்பறித்து மானம் துடைப்பதோர் வாள்.

(நளவெண்பா)

தாஎன்று நீஒன்றைத் தான் கேட்டாய்! அப்பொழுதே
வாஎன்ற சொல்லும்போம்; மானம்போம்-போஎன்று
கூறும் கொடுமொழியும் கூடுமே; யாதுறினும் ஏறாதே யாண்டும் இரவு.

(தருமதீபிகை)

இவை ஈண்டு எண்ணி யுணர வுரியன, இரந்து

வாழ நேர்வதினும் இறந்துபோவது நல்லது. மானம் அழியாத வாழ்வே புனித மான மனித வாழ்வாம்.