பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அணியறுபது


ஈனமது அடையார்.இத்தை அடைந்தவர்; இறக்கும் அப்போது: ஏனும்ஈது அடைவார் என்னை எய்துவார் பிறவி எய்தார்.

(பரமார்த்த தரிசனம்)

சும்மா இருக்கச் சுகம்சுகம் என்று சுருதிஎல்லாம் அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டும் அறிவின்றியே
பெம்மான் மெளனி மொழியையும் தப்பிஎன் பேதைமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன் இதுஎன் விதிவசமே.

[தாயுமானவர்]

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லது மற்று
என்றுவரு மோஅறியேன் என்கோவே!-துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து சும்மா இருக்கும் சுகம்.

(இராமலிங்கர்)

சித்த சாந்தி எத்தகைய மகிமையுடையது: யார் அதனை அடைய வுரியவர்? அடைந்தவர் எப்படி இருப்பர்? என்பதை ஈண்டு அறிந்து கொள்கிறோம்.


18. பல்லுக் கணிவெண்மை; பார்வைக் கணிகூர்மை;
சொல்லுக் கணிதுய்மை தோய்ந்துவரல்;-இல்லுக்கு
நல்ல மனைவியணி; நன்மக்கள் அம்மனைக்குச்
செல்ல அணிகள் தெளி.

(கஅ)

இ-ள்.

வெண்மை பல்லுக்கு அழகு; கூர்மை பார்வைக்கு அழகு: தூய்மை சொல்லுக்கு அழகு; நல்ல மனைவி இல்லுக்கு அழகு; நன்மக்கள் அந்த மனைவிக்கு அழகு என்க. உரிய அழகுகள் அரிய ஒளிகள்.

ஐந்து அழகுகள் இங்கே சிந்தனைக்கு வந்துள்ளன. எழில் உடையன எங்கும் ஒளிபெறுகின்றன. உடல் உறுப்புக்களுள் பல் ஒர் இனமா யிணைந்து இயைந்-