பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

63

துள்ளது. முப்பத்திரண்டு எண்களையுடையது. பல சேர்ந்திருத்தலால் பல் என வந்தது. பலவகையான பண்டங்களை மென்று தின்று உயிர் வாழ்வுக்கு உதவி புரிந்து வருகிறது. ஒலிகளைத் தெளிவாக்கி மொழிகளே எவ்வழியும் நலமா வெளியிடுகிறது.

பல் இழந்தான் சொல் இழந்தான்.

என்பது பழமொழியாய் வந்துள்ளது. பல்லுக்கும் சொல்லுக்கும் உள்ள உறவுரிமைகளையும் ஒலி நிலைகளேயும் இதனால் உணர்ந்து கொள்கிறோம்.

இயல்பான நல்ல வெள்ளே நிறம் ஆதலால் பல்லுக்கு முத்தை உவமை கூறுவது காவியக் கவிகளின் மரபாய் அமைந்து யாண்டும் மருவியுளது.

முத்தம் முறுவல்.  குறள், 1113)

முத்தம் கொல்லோ? முழுநிலவின்
        முறியின் திறனோ? முறை அமுதச்
சொத்தின் துள்ளி வெள்ளியினம்
        தொடுத்த கொல்லோ? துறையறத்தின்
வித்து முளைத்த அங்குரங்கொல்?
        வேறே சிலகொல்? மெய்முகிழ்த்த
தொத்தின் தொகைகொல்? யாதென்று
        பல்லுக்கு உவமை சொல்லுகேன்?
                                        (இராமா: 5 : 5 : 53)

இராமபிரானுடைய பல்லைக் குறித்துக் கவிஞர்பிரான் இவ்வாறு பாடியுள்ளார். உவமான நிலைகளையும் பொருள் நயங்களையும் உரை அழகுகளையும் ஊன்றி ஓர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.