பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அணியறுபது



மரபு நிலை திரியா மாட்சிய வாகி
உரை படு நூல்தாம் இருவகை இயல
முதலும் வழியும்என நுதலிய நெறியின.

(தொல்காப்பியம்)

மரபுநிலை திரியாமையே மாட்சிமையாம் என இஃது உணர்த்தியுளது. இந்த இயல் விதி உயர் பொருளுடையது: ஈண்டு எண்ணி உணரவுரியது.

உலக வாழ்வுக்குப் பொருள் இனிய உதவியாயுள்ளது. அதனைத் தரும வழியில் ஈட்டிக் கொள்வதே நல்லது. அந்த வகையில் வருகிற வரவே எந்த வகையிலும் சிதையாமல் யாண்டும் இனிமையாய்ச் சந்ததிகளுக்கெல்லாம் இன்பம் தந்து வரும்.

தருமம் ஆவதுவே இன்பம்
தருமலால் தருமம் நீக்கும்
கருமம் ஆவதுபோல் தோன்றிக்
காட்டினும் பசு மட் பாண்டத்து
அருமையாய் நிரப்பும் தெண்ணீர்
அனைத்தும்அப் பாண்டத் தோடும்
ஒருமையாய்க் கெடுத லே போன்று
ஒருகணத்து அழியு மன்றே.

(பிரபோத சந்திரோதயம்)

தரும நெறியில் வருகிற பொருள் சுட்ட மண் பாண்டத்தில் இட்டு வைத்த நீர்போல் நிலைத்து இன்பம் தரும்; அவல வழியில் வருவது பச்சை மண் பாத்திரத்தில் வார்த்த நீர்போல் விரைந்து அழிந்து போம் என இது விளக்கியுளது. தண்ணிரோடு குடமும் ஒழிதல் போல் பொருளோடு அந்தக்