பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

அ ணி ய று பது


22. அயல்சார்ந்து வாழாமை ஆண்மைக் கணி

முயல்மானே ஒர்தல் முதலாம்-மயலாகி (யாம்
விழாமை எவ்வழியும் மேன்மைக் கணிகிழாய்
தாழாமை சால்புக் கணி. (உ.உ) [த்.
இ-ள்

பிறர் உதவியால் வாழாமை பேராண்மைக்கு அழகு: மான் முயல் போல் மானமா வாழ்தல் தலைமைக்கு அழகு; மயலில் விழாமை மேன்மைக்கு அழகு; கீழாய்த் தாழாமை சால்புக்கு அழகு என்க.

சால்பு= இனிய குணங்களின் நிறைவு.

தனது உயிர் வாழ்வு இனிமையும் புனிதமும் ஏய்தி வர வாழ்பவனே மெய்யான ஆண் மகனாகப் மேன்மை மிகப் பெறுகிறான். மரியாதையும் மதிப்பும் தனது முயற்சி வழியே உயர்ச்சி அடைந்து வருகின்றன. அயலார் ஆதரவால் வாழ நேரின் அது அடிமை வாழ்வாய்த் தாழ் நேரும். எந்த வகையிலும் பிறர் உதவியை நாடாமல் ஆனவரையும் முயன்று மானமா வாழ்கிற அந்த வாழ்வே அமரர் வாழ்வாம்.

காட்டு விலங்குகளான மான் முயல்களிடமும் மனிதன் கண்டு தெளியவுரிய அரிய நீர்மைகள் மருமமாய் இனிது மருவியிருக்கின்றன.

இரவறியா; யாவரையும் பின்செல்லா; நல்ல
தருநிழலும் தண்ணீரும் புல்லும்-ஒருவர்
படைத்தனவும் கொள்ளா;இப் புள்ளிமான் பார்மேல்
துடைத்தனவே அன்றே துயர்? (தண்டி)

புள்ளிமான் புனித வாழ்வை உள்ளம் தெளிய இது