பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அணியறுபது

73


நாடு பொருள் கவி பயிர் என்னும் இவை ஈண்டு உரிமையாக் காண வந்தன. உரிய தன்மைகள் தோய்ந்து வரும் அளவே எவையும் நன்மைகளாய்ப் பெருமை பெற்று வருகின்றன.

மனிதன் உழைத்து வருகிற உழைப்புகள் பல. உழு தொழில் செய்கிறான் வாணிகம் புரிகிறான்: கல்வி கற்கிறான் செல்வம் ஈட்டுகிறான் இன்னவாறே பலவும் ஆற்றி வருகிறான் வருவன எல்லாம் சுகமாய் வாழ்ந்து வரவே. உடல் வாழ்வை மட்டும் கருதி வருபவர் பரிதாபமாய் மறைகின்றார், உயிர் வாழ்வைக் கருதி உறுதி நலங்களைச் செய்து வருபவர் மெய்யறிவாளராய் உய்தி பெறுகின்றார்.

ஈதற்குச் செய்க பொருளே; அறநெறி
சேர்தற்குச் செய்க பெருநூலே;- யாதும்
அருள்புரிந்து சொல்லுக சொல்லே இம் மூன்றும்
இருளுலகம் சேராத வாறு.

(திரிகடுகம் 90)

துன்பம் யாதும் தோயாமல் இன்ப உலகம் சேர்ந்து இனிது வாழ வுரிய வழியை இது விளக்கியுளது. அறநெறியும் அருள் ஒளியும் மருவி வருபவர் இருள் உலகம் ஒருவி இன்பம் மிகப் பெறுகின்றார்.

பயிர்கள் வளர்ந்து வரப் பாடறிந்து பெய்யும் பருவ மழைபோல் உயிர்கள் உவந்து வர எவ்வழியும் அருளோடு உணர்ந்து உதவி புரிந்து வருபவர் வியனாய் உயர்ந்து மேலான நிலைகளில் செல்கின்றார்.

கைம்மாறு கருதாமல் மழை பெய்து வருகிறது; அவ்வரவால் வாழ்ந்து வருகிற மனிதனும் பிறர்க்கு