பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



80

அணியறுபது


உபகாரியாய் யாண்டும் இதம்புரிந்து வரவேண்டும். உதவி வருகிற அளவே உயர்வு பெறுகிறான்.


25.

குளத்துக் கணியுயர்ந்த கோடே குறித்த
வளத்துக் கணியமைந்த வாழ்வே-உளத்துக்
மாதர் பிறரை மருவநினை யாமையணி [கு.
ஒதலணி மக்கட் குவந்து.(௨௫)

இ-ள்.

உயர்ந்த கரை குளத்துக்கு அழகு; அளவறிந்து வாழ்வதே வளத்துக்கு அழகு; மறுமங்கையரை மருவ நினையாமையே உளத்துக்கு அழகு, ஓதி உணர்ந்து ஒழுகுதலே மாந்தர்க்கு அழகு என்க.

கரை சரியாய் அமையவில்லையானால் ஏரி நீர் இரிந்து போம் ஆதலால் கோடு அதற்கு அணி என வந்தது. வேலிபோல் வளைந்து அரணாய்க் கோலியிருக்கும் கரை கோடு என நேர்ந்தது.

தனக்கு வருகிற பொருள் வருவாய்களின் அளவுகளை ஓர்ந்து சீரும் செட்டுமாய்ச் செலவு செய்யாதவன் வாழ்வு பலவகை இடர்களை அடைந்து விரைவில் நிலைகுலைந்து போம்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றக் கெடும்.(குறள், 479)

அளவை அறிந்து வாழுக; அவ்வாறு வாழவில்லையானால் அந்த வாழ்வு விரைந்து அழிந்து போம் எனத் தேவர் இவ்வாறு அச்சுறுத்தியிருக்கிறார்.