பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

83


றோம் பிற உயிர்களும் பசி நீங்கி மகிழ்ந்து வாழ்ந்து வரச் செய்கிற உபகாரியை வானவரும் வியந்து புகழ்ந்து உவந்து வருகின்றனர்.

பசித்து உண்பதே மிகவும் நல்லது. தேக சுகமும் விவேகமும் இதனால் விளைந்து வருகிறது. உண்ணும் உணவைப் பசி அறிந்து பதமாய் உண்பவன் உரமாய் உயர்ந்து உணர்வு மீதூர்ந்து வருகிறான்.

அற்றது அறிந்து, கடைப்பிடித்து, மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

(குறள் 944)

மனிதன் எவ்வாறு உண்டு செவ்வையா வாழ்ந்து வரவேண்டும் என்பதை இஃது உணர்த்தியுளது.

நன்றாகப் பசித்தபின் அருந்துவதால் சிறந்த நன்மைகள் சீர்மையாய் விளைந்து வருகின்றன.

குடல் காய உண்டால்
உடல் காயம் ஆகும்.

என்பது முதுமொழி. உயிர் துயர் உறாமல் நெடிது வாழ வுரிய அரிய சித்தி தெரிய வந்தது.


27. ஆற்றுக் கணியமைந்த வெள்ளமே; ஆற்றிநின்ற
ஊற்றுக் கணியினிய ஊறலே;-பேற்றுக்குப் :பேணநின்ற இன்பப் பெருக்கே அணியுடற்குக் :காண நின்ற காட்சியே காண்.

(உஎ)

இ-ள்

நதிக்கு வெள்ளமே அழகு; ஊற்றுக்கு இனிய ஊறலே அழகு: அரிய பேற்றுக்கு அழகு பெரிய

இன்பமே; உடம்புக்கு அழகு நல்ல காட்சியே என்க.