பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

அணியறுபது


ஊறல்=ஊறி வருகிற நல்ல தண்ணீர்.

நதியில் வெள்ளம் வற்றிய பொழுது ஊற்று நீர் உயிர்களுக்கு உதவி புரிகிறது. ஆறு இயற்கையில் எய்தியது. ஊற்று செயற்கையில் அமைந்தது. பயிர்களுக்கும் உயிர்களுக்கும் இவை ஆதரவாய் முறையே இதம் புரிந்து வருகின்றன.

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்அந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லைஎன மாட்டார் இசைந்து.

(நல்வழி,9)

சிறந்த குடிப் பிறப்பாளர் எவ்வழியும் பிறர்க்கு இரங்கி உதவி புரிவர் என்பதைத் தெளிவாக விளக்குதற்கு ஆற்று நீரும் ஊற்று நீரும் இவ்வாறு உவமையா வந்துள்ளன. உண்ணிராய் நின்று தண்ணீர் உயிர்களுக்கு உதவி வருதல் போல் தண்ணளியுடையராய் இதம் புரிந்து வருபவர் புண்ணிய சீலராய்ப் பொலிந்து திகழ்கின்றார்.

இம்மையில் அருமையாகப் பெறுகிற கல்வி செல்வங்களுக்கும் மறுமையில் அடைகிற சுவர்க்கத்துக்கும் இன்ப வளமே அழகுகளாம். துன்பம் தொடராத சுகமே பேரின்பம் ஆகிறது,

அரிய அறிவும் இனிய காட்சியும் மனித தேகத்துக்கு உரிய மாட்சிகளாய் ஒளி புரிகின்றன.

நீர் இல்லாத ஆறு, ஊறல் இல்லாத ஊற்று. இன்பம் இல்லாத பேறு, காட்சியில்லாத கண் இழி-