பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. முகவுரை

திருமேனியை மருவி அந்த் அணிகளே அழகு மிகப் பெற்றன என இந்த அழகிய கவி விழுமிய அழகை நயமா விளக்கியுளது. கவியின் சுவையைக் கருதியுணர்பவர் அரிய பல உண்மைகளை நெறிமுறையே அறிந்து கொள்வர்.

உருவ அழகுடன் கற்பு முதலிய அற்புத எழில்களும் நிறைந்துள்ள அதிசய அழகி ஆதலால் காவியத்தில் இவ்வாறு எவ்வகையாரும் வியந்து மகிழச் சீவிய ஓவியமாய் விளங்கி நிற்கிறர்.

அழியா அழகு உடையான்.

அணி பறித்து அழகு செய்யும் அணங்கு.

இராம காவியத்தின் தலைவனும் தலைவியும் ஆகிய இராமபிரானும் சானகிதேவியும் இவ்வகையில் எவ்வழியும் எழில் ஒளிகளாய் நிலவியுள்ளனர். அழகு எத்தகைய மகிமை வாய்ந்தது என்பதை இவற்றல் உய்த்து உணர்ந்து கொள்ளலாம்.

உடல் அழகு உயிர் அழகு என அழகு இருவகை நிலைகளில் மருவி யுளது. முன்னதினும் பின்னதே உண்மையான உயர் பேரழகாம். இந்த மேலான அழகையே இந்நூல் சீராட்டிப் பாராட்டியுள்ளது.

கண்ணுக்கு அருள் அணி;

கைக்கு ஈதலே அணி;

பெண்ணுக்குக் கற்பு ஒன்றே பேரணி.

இன்னவாறன அழகுகள் இதில் அணிஅணியாய் வந்து ஆன்ம எழில்களே விளக்கி யுள்ளன.