பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

85


வுடையனவாம். உரிய நீர்மைகள் மருவி வருவனவே. அரிய அழகுகளாய் எங்கும் ஒளிகள் பெறுகின்றன.


28. பூவுக் கணிமணமே பொன்னுக் கணிஒளியே
பாவுக் கணிபொருளின் பாரிப்பே-நாவுக்கு மெய்யே அணிஎன்றும் மேவியநல் லுண்டிக்கு நெய்யே அணியாம் நெடிது.

(உஅ)

இ-ள்

பூவுக்கு மணமே அழகு; பொன்னுக்கு ஒளியே அழகு; பாவுக்கு இனிய பொருள் நிறைவே அழகு; நாவுக்கு மெய்யே அழகு, உணவுக்கு நெய்யே அழகு என்க.

மணத்தால் மலர் மாண்புறுகிறது; ஒளியால் பொன் உயர்வுறுகிறது; பொருள் வளத்தால் கவி கவினுறுகிறது; சத்தியத்தால் நாக்கு நலம் பெறுகிறது; நெய்யால் உணவு சுவை மிகுகிறது.

எவ்வழியும் சத்தியமே பேசிவரின், மலர்மாலை அணியலாம்; பொன் அணி பூணலாம்; கவியின் சுவைகளை நுகரலாம்; நெய்கலந்த சுவை உணவுகளை அருந்தலாம்; இந்த உண்மைகளை இதில் நுண்மையா ஒர்ந்து உணர்ந்து கொள்ளுக.

பூவும் பொன்னும் பாவும் நாவும் உணவும் ஈண்டு உரிமையா உணர வந்துள்ளன. பாவை நடுவே வைத்தது, உணர்வின் சுவையாய் ஒளி மிகுந்துள்ள அதன் உயர் நிலை கருதி.

பா=பாட்டு. மொழி வழியே எண்ணங்கள்