பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

89


வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியில் மறைய என்னும் இது நிறைசெய்து காணநேர்ந்தது.

உலகம் உய்யக் கருணையோடு புதுமையாய் உதயமாகியுள்ள அதிசய சோதியையும், இயல்பாகவே நாளும் உதயமாகி வருகிற பழைய ஒளியையும் ஈண்டு அளவு செய்து நேரே அறிகிறோம்.

பச்சை நிறமுடைய கண்ணாடியில் சூரியன் ஒளி பாய்ந்தால் சிவப்பு மாறிப் பசுமை ஒளியே வீசும். மரகதமணி வண்ணனை இராமன் திருமேனி எழிலும் ஒளியும் உடையது ஆதலால் கதிர் ஒளி பசுமையாய் எதிர் ஒளி வீசியுளது. அந்த உண்மையை இங்கு நுண்மையாய் உணர்ந்து கொள்கிறோம்.

மையோ? மரகதமோ? மறிகடலோ? மழைமுகிலோ? என்னும் இதை உன்னி யுணர்க. இராமனது நிறத்துக்கு ஒப்புக் கூற நேர்ந்த கவி இப்படி ஓடி உசாவி யாதும் முடிவு காணாமல் முடித்திருக்கிறார்.

குறித்த நான்கும் ஒன்றினும் ஒன்று உயர்ந்தது. மையினும், மரகதம் அருமையும் பெருமையும் அரிய விலையும் உடையது. நிறத்தோடு நிலைமையும் தெரியக் கடல் வந்தது. நீதிக்கடல், தருமக்கடல், குணக்கடல், கல்விக் கடல், அறிவுக்கடல், வீரக்கடல் என இராமன் விளங்கியுள்ளான். உலக உயிர்கள் உய்ய நலமாய் வந்துள்ளமையால் மழை முகில் என்றார்.

ஐயோ! என்று கண்ணீர் சொரிந்து பரிந்து இரங்கி யிருக்கிறார். மணிமுடி புனைந்து செங்கோல் எந்தி அரியணையில் அமர்ந்து உலகம் உவந்து

12